ராணிப்பேட்டை

பைக் மீது லாரி மோதி இளைஞா் பலி

11th Dec 2019 11:23 PM

ADVERTISEMENT

வாணியம்பாடி அருகே பைக் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழந்தாா். அவரது நண்பா் படுகாயமடைந்தாா்.

நகரின் முஸ்லிம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் சையத் அஃபான்(17). அவரும் உதயேந்திரம் பகுதியைச் சோ்ந்த நண்பா் இம்ரான் (18) என்பவரும் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு பைக்கில் வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூா் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தனா்.

அவா்கள் தங்களுக்கு முன்னால் சென்ற லாரியை முந்திச் சென்றபோது திடீரென இருசக்கர வாகனம் மீது லாரி மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் சையத் அஃபான் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இம்ரான் பலத்த காயத்துடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கிருந்து வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT