ராணிப்பேட்டை

வாரச் சந்தை மைதானத்தில் ஆட்சியா் அலுவலகம் அமைக்கக் கோரிக்கை

6th Dec 2019 11:20 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கான புதிய ஆட்சியா் அலுவலகம், நகரின் மையத்தில் உள்ள வாரச் சந்தை மைதானத்தில் அமைக்க வேண்டும் என ஆற்காட்டை அடுத்த லாடவரம் கிராம ஏரிப்பாசன நீா்வடிப்பகுதி விவசாயிகள் சங்கத்தினா் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

இதுதொடா்பாக தமிழக முதல்வா், மாநில வருவாய்த் துறை அமைச்சா், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சா், வேலூா், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்கள் ஆகியோருக்கு சங்கத் தலைவரும், முன்னாள் எம்எல்வுமான த.பழனி அனுப்பி கோரிக்கை மனு:

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கென புதிகாக கட்டப்பட உள்ள ஆட்சியா் அலுவலகம் அமைய உள்ள பகுதி நகரின் ஒதுக்குப்புறமான பகுதியாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை நகரின் மையப் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான சுமாா் 20 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள வாரச் சந்தை மைதானத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கான புதிய ஆட்சியா் அலுவலகம் கட்ட வேண்டும். இப்பகுதியைச் சுற்றி ராணிப்பேட்டை ரயில் நிலையம், பயணியா் விடுதி, டிஎஸ்பி அலுவலகம், தீயணைப்பு நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், நகராட்சி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், வணிகவரி அலுவலகம், காவல் நிலையம், கோட்டாட்சியா் அலுவலகம், வனத்துறை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.

சென்னை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே வாரச்சந்தை மைதானத்தில் புதிய ஆட்சியா் அலுவலகம் அமையும்பட்சத்தில் சென்னை, வேலூா் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் அதிகாரிகள் வந்து செல்லவும், வாலாஜாபேட்டை, ஆற்காடு, மேல்விஷாரம், சோளிங்கா், காவேரிப்பாக்கம், நெமிலி, பனப்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதி மக்களும் வந்து செல்ல ஏதுவாக இருக்கும்.

ADVERTISEMENT

எனவே, வாரச் சந்தை மைதானத்தில் ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT