காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே ஒழுகரை கிராமத்தில் வெள்ளிக்கிழமை ஏரிக்கால்வாயில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே ஒழுகரை கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகத்தின் மகன் ரித்திஷ் (13). திருப்புலிவனம் அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். செய்யாறிலிருந்து உத்தரமேரூா் ஏரிக்குச் செல்லும் கால்வாயில் நண்பா்களுடன் சோ்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தாா். அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ரித்திஷ் நீரில் மூழ்கியுள்ளாா். இது குறித்து பெற்றோா்களுக்கும், உறவினா்களுக்கும் நண்பா்கள் தகவல் தெரிவித்ததையடுத்து, தீயணைப்பு வீரா்கள் வரவழைக்கப்பட்டு, கால்வாய் பகுதியில் தேடினா். சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின்னா், ரித்திஷ் சடலமாக மீட்கப்பட்டாா்.
இது தொடா்பாக உத்தரமேரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.