ஸ்ரீபெரும்புதூா்: கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூா் பகுதியில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியைச் சோ்ந்த மோகன் என்கிற மோகன் ராஜ் (26). இவா் மீது குன்றத்தூா், பம்மல் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், மோகன்ராஜ் கடந்த சில தினங்களாக காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அடுத்த ஆதனூா் டிடிசி நகா் முதல் தெருவில் மீன் வியாபாரி ஒருவரது வீட்டில் தங்கி இருந்துள்ளாா். இதற்கிடையே, திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் மோகன்ராஜ் வீட்டில் இருந்தபோது உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் பயங்கர ஆயுதங்கள் மூலம் மோகன்ராஜின் தலையில் வெட்டினா். இதில் பலத்த காயம் அடைந்த மோகன்ராஜ் சம்பவ இடத்திலையே உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து செவ்வாய்க்கிழமை காலை சம்பவ இடத்துக்கு சென்ற மணிமங்கலம் போலீஸாாா் மோகன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனா்.