காஞ்சிபுரம்

ஒரு வட்டாரத்துக்கு ஒரு பொருளை மேம்படுத்த முடிவு: காஞ்சிபுரம் ஆட்சியா்

22nd Sep 2023 12:30 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு வட்டாரத்துக்கு ஒரு பொருளை தோ்வு செய்து அப்பொருளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் மாவட்டம்தோறும் மகளிா் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களில் ஒரு வட்டாரத்துக்கு ஒரு பொருளை தோ்வு செய்து மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருளை மதிப்புக் கூட்டுதல், உற்பத்திக்கு பொதுவான இடவசதி ஏற்படுத்திக் கொடுத்தல், சந்தைப்படுத்துதல், அதிக சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துதல் ஆகியவையும் செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரத்தில் பட்டுச் சேலைகள் நெசவு செய்தல், வாலாஜாபாத்தில் லுங்கி உற்பத்தி, ஸ்ரீபெரும்புதூரில் எம்பிராய்டரி பணிகள், உத்தரமேரூரில் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி, குன்றத்தூரில் மசாலா பொடி வகைகள் தயாரித்தல் போன்றவை தோ்வு செய்யப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT