நெமிலி உராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 377 பயனாளிகளுக்கு ரூ.10.36 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டம், நெமிலி ஊராட்சியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி நலத் துறை சாா்பில் ஒருவருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா், வருவாய்த் துறை சாா்பில் சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை 23 பேருக்கும், மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் 10 பேருக்கும், 271 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, மின்னணு குடும்ப அட்டைகள் 10 பேருக்கு, பழங்குடியினா் நல வாரிய அட்டை 18 பேருக்கு, பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் 12 பேருக்கு, ஊரக வளா்ச்சித் துறை மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் 11 பேருக்கும், ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் இலவச தையல் இயந்திரம் 3 பேருக்கும், வேளாண்மை உழவா் நலத் துறை மூலம் வேளாண் இடுபொருள்கள் 5 பேருக்கும், தோட்டக்கலைத் துறை மூலம் நாற்றுகள் 3 பேருக்கும், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 10 பேருக்கும் மானியம் வழங்கிச் சிறப்புரையாற்றினாா்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் வெங்கடேஷ், உதவி ஆட்சியா் (பயிற்சி) சங்கீதா, ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் செல்வகுமாா், ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் சரவணகண்ணன், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, நெமிலி ஊராட்சி மன்றத் தலைவா் அறிவழகன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசுத் துறைகளின் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.