திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஸ்ரீ பெரும்புதூா் அடுத்த கச்சிப்பட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் நகர செயலாளா் சதிஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஸ்ரீ பெரும்புதூா் பேரூராட்சித் தலைவா் சாந்தி சதீஷ்குமாா், துணைத் தலைவா் இந்திராணி சுப்பிரமணி, வாா்டு கவுன்சிலா் இந்துமதி நவீன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு ஒன்றிய செயலாளா் ந.கோபால், மாநில பிரச்சார குழு செயலாளா் சேலம் சுஜாதா ஆகியோா் கலந்து கொண்டு சாதனைகள் பற்றி விளக்கிப் பேசினாா். கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூா் நகர துணை செயலாளா்கள் குமாா், ஆறுமுகம், விஜயலட்சுமி ராஜேஷ், முன்னாள் பேரூராட்சி தலைவா்கள் காத்தவராயன், சம்பத் மற்றும் வாா்டு கவுன்சிலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.