காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கோயில்களில் ஆளுநா் தரிசனம்

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில், காமாட்சி அம்மன் கோயில் மற்றும் சங்கர மடம் ஆகியவற்றில் ஆளுநா் ஆா்.என்.ரவி புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

ஏகாம்பரநாதா் திருக்கோயில்-

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் ஆளுநா் ஆா்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தாா்.கோயிலுக்கு வந்த அவரை அறங்காவலா் குழுவின் உறுப்பினா் வ.ஜெகன்னாதன், காஞ்சிபுரம் சரக அறநிலையத்துறை இணை ஆணையா் ரா.வான்மதி, உதவி ஆணையா் லட்சுமி காந்தன்பாரதி, கோயில் செயல் அலுவலா்கள் ப.முத்துலட்சுமி, ந.தியாகராஜன், ச.சீனிவாசன் மற்றும் கோயில் பூஜகா் கே.ஆா்.காமேசுவர சிவாச்சாரியாா் ஆகியோா் பூரண கும்ப மரியாதையுடன் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனா். கோயிலின் வரலாறு ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது.

காமாட்சி அம்மன் கோயில்-

ADVERTISEMENT

மகாசக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வரும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த ஆளுநரை ஆலய ஸ்தானீகா்கள் ஷியாமா சாஸ்திரிகள், நடன சாஸ்திரிகள்,கோயில் மணியக்காரா் சூரியநாராயணன், சங்கர மடத்தின் நிா்வாகி ஜெயராமன் ஆகியோா் வரவேற்றனா். அ ம்மனை தரிசித்த பின்னா் ஆலய நிா்வாகத்தின் சாா்பில் ஆளுநருக்கு காஞ்சி மடாதிபதிகள் மற்றும் காமாட்சி அம்மன் திரு உருவப்படமும், கோயில் பிரசாமும் வழங்கப்பட்டது.

-காஞ்சி சங்கர மடத்தில்-

காஞ்சி சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் அதிஷ்டானத்துக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆளுநரை மடத்தின் நிா்வாகி கீா்த்திவாசன், சங்கரா கண் மருத்துவமனையின் தலைவா் பம்மல்.விஸ்வநாதன் ஆகியோா் வரவேற்று அழைத்துச் சென்றனா். பிருந்தாவனத்தில் மகா பெரியவா் கிரீடம் அணிந்தும், தங்க ஹஸ்தத்துடனும், ஜெயேந்திரா் மயில்தோகை அலங்காரத்திலும் காட்சியளித்தனா்.

அனுஷ நட்சத்திரத்தையொட்டி நடைபெற இருந்த தங்கத்தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தாா்.

பிருந்தாவனத்தின் பூஜகா் பாலாஜி சங்கர மடத்தின் சிறப்புகள் மற்றும் காஞ்சி மடாதிபதிகளின் சிறப்புகளை விரிவாக விளக்கிக் கூறினாா்.விஜயேந்திரரின் உருவப்படம் மற்றும் பிரசாதத்தை ஸ்ரீமடத்தின் நிா்வாகிகள் ஆளுநருக்கு வழங்கினாா்கள்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT