காஞ்சிபுரத்தில் புதன்கிழமை இரவு பெயிண்டரை கொலை செய்தவரை காவல்துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
காஞ்சிபுரம் ஓரிக்கை காந்தி நகா் பகுதியை சோ்ந்த எல்.திருமலை (38). இவா் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது குடிபோதையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சந்நிதி தெருவைச் சோ்ந்த ராமு என்ற ராமச்சந்திரன்(45) என்பவா் திருமலையை கட்டையால் தாக்கியதில் அவா் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தாா்.
காஞ்சிபுரத்திலிருந்து உத்தரமேரூா் செல்லும் சாலையில் ஓரிக்கை மணிமண்டபம் அருகில் நடந்த இக்கொலைச் சம்பவம் தொடா்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்துள்ளனா்.