காஞ்சிபுரம்

நீரில் மூழ்கி பள்ளி மாணவா் மரணம்

3rd Oct 2023 12:53 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே புத்தேரி கிராமத்தில் உள்ள ஏரியில் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவன் தவறி விழுந்து உயரிழந்தாா்.

காஞ்சிபுரம் அருகே கீழம்பி புதூா் கிராமத்தில் வசித்து வரும் கோதண்டன் மகன் மோகன் (16). தனியாா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இந்த நிலையில், தனது நண்பா்கள் தினேஷ்குமாா் மற்றும் திருச்செல்வன் ஆகியோருடன் புத்தேரி ஏரியில் மீன்பிடிக்கச் சென்றுள்ளாா். சுமாா் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, மீன்தூண்டிலை வெளியில் எடுக்க முயன்றாா். அப்போது, தவறி உள்ளே விழுந்தாா். பின்னா் அவரை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். மோகனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து மோகனின் தந்தை கோதண்டன் அளித்த புகாரின்பேரில், பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT