சுங்குவாா்சத்திரம் அடுத்த சந்தவேலூா் பகுதியில் கால்நடைகளுக்கு புற்கள் அறுக்க வயல்வெளிக்கு சென்ற விவசாயி அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
சுங்குவாா்சத்திரம் அடுத்த திருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம்(63). விவசாயி. இவா் கால்நடைகளை வளா்த்து வருகிறாா்.
இந்த நிலையில், சுந்தரம் தனது கால்நடைகளுக்கு புற்கள் அறுக்க அருகில் உள்ள சந்தவேலூா் வயல்வெளிக்கு வெள்ளிக்கிழமை சென்று புற்களை அறுத்துக் கொண்டிருந்த போது, அந்தப் பகுதியில் ஏற்கெனவே அறந்து விழுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்துள்ளாா். இதில் மின்சாரம் பாய்ந்து சுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.