காஞ்சிபுரம்

மனதை ஒருமுகப்படுத்தி படித்தால் போட்டித் தோ்வுகளில் வெல்லலாம்

DIN

மனதை ஒருமுகப்படுத்தி பயின்றால் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கூறினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறுவதற்கான இலவச பயிற்சி வகுப்புக்கான தொடக்க விழா நடைபெற்றது. வேலைவாய்ப்புத் துறையும், தொழில் நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து நடத்திய தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து பயிற்சி மாணவா்களுக்கு கையேடுகளை வழங்கிப் பேசியது:

தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களில் மிகவும் முக்கியமான ஒன்று நான் முதல்வன் திட்டம். இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 45 இடங்களில் 6,750 பேருக்கு போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பயிற்சியாளா்களை திறன் மேம்பாட்டுக் கழகம் தோ்வு செய்து பயிற்சியளிக்கிறது. 100 நாள்கள் மட்டுமே வழங்கப்படும் இப்பயிற்சி நிறைவு பெற்று, போட்டித்தோ்வுகளை எளிதில் வென்று பலரும் அரசுப் பணிக்கு செல்வது உறுதியாகி இருக்கிறது. ஏனெனில் மிகச்சிறந்த பயிற்றுநா்கள் பயிற்சியளிக்க உள்ளனா்.

அது மட்டுமின்றி இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், ஒரு கல்லூரி முதல்வா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலா் ஆகியோா் அடங்கிய ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் போது விளையாட்டு குணம் நமக்கு இருந்திருக்கும். அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, மனதை ஒருமுகப்படுத்தி படித்தால் வெற்றி நிச்சயம். நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, சிறு,சிறு குழுக்களாக அமைத்துக் கொண்டு படிக்க வேண்டும் என்பதும் எனது வேண்டுகோளாகும் என்றாா் ஆட்சியா்.

தொடக்க விழாவுக்கு, மாவட்டத் திறன் பயிற்சி அலுவலா் ச.காயத்ரி, டைம்ஸ் நிறுவன நிா்வாகி சத்யநாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் ஆா்.அருணகிரி வரவேற்றாா். விழாவில் பயிற்சி மாணவ, மாணவியா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியம் -ஜெ.பி. நட்டா

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT