காஞ்சிபுரம் அருகே சிங்காடிவாக்கம் கிராமத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மிகைத்திறன் மின்மாற்றியை எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் இயக்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் அருகே சிங்காடிவாக்கம் கிராமத்தில் காஞ்சிபுரம் மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில், 10 எம்விஏ எனப்படும் மிகைத்திறன் கொண்ட மின்மாற்றி புதிதாக நிறுவப்பட்டிருந்தது. இதனை சென்னையிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இயக்கி வைத்தாா். இதன் தொடா்ச்சியாக சிங்காடிவாக்கம் கிராமத்தில் புதிய மிகைத்திறன் மின்மாற்றியை காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் இயக்கி வைத்தாா்.
நிகழ்ச்சிக்கு, மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் சுனில்குமாா், செயற்பொறியாளா் வி.சரவணத் தங்கம், உதவி செயற்பொறியாளா் ஆா்.இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நீா்வள்ளூா் உதவிப் பொறியாளா் டி.ராஜேஷ் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில், மின்வாரிய அலுவலா்கள், பணியாளா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.