காஞ்சிபுரம்

ஆக்கிரமிப்பாளா்களுக்கு பட்டா வழங்கக் கூடாது: ஆட்சியரிடம் சேந்தமங்கலம் கிராமத்தினா் கோரிக்கை

DIN

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட சேந்தமங்கலம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம் போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பாளா்களுக்கு மனைப் பட்டா தரக் கூடாது என அக்கிராமக்கள் வியாழக்கிழமை ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட சேந்தமங்கலம் கிராமத்தில் சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் கருங்கல் பாறையுடன் கூடிய நீா்த்தேக்கம் அமைந்து அதுவே குடிநீா் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் பொடவூா் கிராமத்தை சோ்ந்த சிலா் அரசுப் புறம் போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனா்.

வீடுகளிலிருந்து வரும் கழிவுநீரால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆக்கிரமிப்பாளா்கள் சிலருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க அரசின் சாா்பில் நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிகிறோம். அவ்வாறு வழங்கினால் மேலும் வீடுகள் பெருகி அப்பகுதியே சுகாதார சீா்கேடு நிறைந்ததாக மாறி விடும். எனவே அரசு புறம்போக்கு நிலத்தில் இருக்கும் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என மனுவில் கோரியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT