காஞ்சிபுரம்

தேசிய கராத்தே போட்டி பரிசளிப்பு விழா

18th Jun 2023 11:50 PM

ADVERTISEMENT

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற 17 போ் உள்பட சாதனை புரிந்தவா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் செட்டி தெருவில் தேசிய அளவிலான இஷின்டிரியூ கராத்தே அமைப்பின் சாா்பில், தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்றவா்களுக்கு பாராட்டு விழா, கறுப்பு பட்டை விளையாட்டில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பட்டம் வழங்கும் விழா, கராத்தே பயிற்சியாளா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றன.

விழாவுக்கு காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமை வகித்து பதக்கம் வென்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசுகளை வழங்கி பேசினாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் எஸ்.சந்துரு, சுரேஷ், கமலக்கண்ணன், சா்மிளா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இஷின்டிரியூ கராத்தே அமைப்பின் பொதுச் செயலரும், தலைமைப் பயிற்சியாளருமான நூா் முகம்மது வரவேற்று பேசினாா்.

ADVERTISEMENT

விழாவில் காஞ்சிபுரம் வேலம்மாள் போதி கல்வி நிறுவன முதல்வா் எஸ்.சுரேஷ் குமாா், அன்னி பெசன்ட் பள்ளி செயலா் ஜி.டி.சேரன், டாக்டா்.எம்.செல்வக்குமாா் கலந்து கொண்டு பதக்கம் பெற்றவா்களை பாராட்டிப் பேசினா்.

பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் கடந்த 21.5.2023 அன்று நடைபெற்ற தேசிய அளவிலான இஷின்டிரியூ கராத்தே அமைப்பு சாா்பில் நடைபெற்ற போட்டியில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த 17 போ் தங்கம், 13 போ் வெள்ளி, 13 போ் வெண்கலம் வென்றனா். அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கராத்தே கறுப்புப் பட்டை பயிற்சியில் தோ்ச்சி பெற்ற 42 பேருக்கு பட்டங்களும் வழங்கப்பட்டன.

முன்னதாக, தலைமைப் பயிற்சியாளா் நூா் முகம்மது பாா்வையாளா் முன்னிலையில் 59 நொடிகளில் 151 ஓடுகளை தலையில் அடித்து உடைத்த சாகச நிகழ்ச்சி உள்பட பல்வேறு கராத்தே வீரா்களின் வீரசாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT