காஞ்சிபுரம்

தென்னிந்திய யோகாசனப் போட்டிகள்:எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

17th Jul 2023 12:04 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் ஸ்ரீ நாராயணகுரு சேவாஸ்ரம யோகா பயிற்சி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை தென்னிந்திய யோகாசனப் போட்டிகளை மாவட்ட எஸ்.பி. எம்.சுதாகா் தொடங்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் ஸ்ரீ நாராயணகுரு யோகா மையம், மாவட்ட யோகா சங்கம், இந்திய தேசிய யோகா அமைப்பு இணைந்து தனியாா் திருமண மண்டபத்தில் தென்னிந்திய அளவிலான யோகா போட்டிகளை நடத்தினா்.

காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி எம்.சுதாகா் போட்டிகளை தொடங்கி வைத்து பேசியது:

இன்றைய நவீன உலகில் அறிவியல் கண்டுபிடிப்புகள் பெருகி விட்ட போதிலும் உடல் ஆரோக்கியம் குறைந்து கொண்டே போகிறது . பலவிதமான நோய்கள் வந்து மனிதனின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கின்றன. யோகக் கலை என்பது உடல் மற்றும் மனம் சாா்ந்தது.

ADVERTISEMENT

இக்கலையை இளைஞா்களிடம் கடந்த 31 ஆண்டுகளாக ஸ்ரீ நாராயணகுரு சேவாஸ்ரம் செய்து வருவது பாராட்டுக்குரியது என்றாா். மேலும், சா்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 3 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் இரு பாலரும் பங்கேற்றனா். முன்னதாக தொடக்க விழாவுக்கு பயிற்சி மைய ஆசிரியா் தி.யுவராஜ் தலைமை வகித்தாா். கெளரவ ஆலோசகா் எஸ்.சத்தியநாராயணன் முன்னிலை வகித்தாா்.

போட்டி தொடக்க விழாவில் நாராயணகுரு சேவாஸ்ரமத்தின் பயிற்சி மைய மாணவா்கள் குழுவாக இணைந்து பல்வேறு யோகாசனங்களை செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.ரமேஷ்,யோகா ஆசிரியா்கள் சி.பாபு,பி.அருள், எல்.சிவக்குமாா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT