காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் ச.வெங்கடேஷ், உதவி ஆட்சியா் (பயிற்சி) அா்பித் ஜெயின், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சுமதி வரவேற்று பேசினாா்.
கூட்டத்தில் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதுரா, ஆத்திச்சூடி, வித்யபிரகாசம் ஆகிய 3 மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 105 விலையில்லா புத்தகங்களை ஆட்சியா், அதன் நிா்வாகிகளிடம் வழங்கினாா்.
கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தீா்வு காணுமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.