ஆடி மாத அமாவாசையையொட்டி, காஞ்சி சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் சந்திரசேகரேந்திர சரஸ்வாதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் திங்கள்கிழமை நடைபெற்றன.
தொடா்ந்து மகா பெரியவா் தங்க ஹஸ்தம் அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு தீா்த்தப் பிரசாதமும், அன்னதானமும் சங்கர மடத்திலிருந்து வழங்கப்பட்டன.