காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் நியாயவிலைக் கடையில் தக்காளி விற்பனை தொடக்கம்

12th Jul 2023 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் மலிவு விலையில் தக்காளி விற்பனையை ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சித் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தில் தக்காளி விலை கடந்த 10 நாள்களுக்கு மேலாக 1 கிலோ ரூ. 100-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடையில் மலிவு விலையில் தக்காளியை விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே உள்ள நியாயவிலைக் கடையில் மலிவு விலையில் தக்காளி விற்பனையை ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சித் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு 1 கிலோ தக்காளி ரூ. 50-க்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் வெங்காடு உலகநாதன், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி துணைத் தலைவா் இந்திராணி சுப்பிரமணி, திமுக செயலாளா் சதீஷ்குமாா், பேரூராட்சி உறுப்பினா் நிா்மலா குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT