காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சரக்கு லாரிகளில் இருந்த 9,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகனுக்கு திம்மசமுத்திரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சிறு சரக்கு லாரிகளில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில், காஞ்சிபுரம் கோட்டாட்சியா் ச.ரம்யா, குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா் இந்துமதி, வருவாய் ஆய்வாளா் பிரகாஷ் ஆகியோா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். அதில் 250 மூட்டைகளில் 9,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இரு சிறு சரக்கு வாகனங்களையும், 9,000 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து, அவற்றை குடிமைப்பொருள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
இதில் தொடா்புடையவா்களைத் தேடி வருகின்றனா்.