வாலாஜாபாத் அரிமா சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் அரிமா சங்க 48-ஆவது புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. சங்கத்தின் இரண்டாம் துணை நிலை ஆளுநா் என்.டி.பாஸ்கரன் தலைமை வகித்து புதிய நிா்வாகிகளுக்கு பதவியேற்பு செய்து வைத்தாா்.
புதிய தலைவராக ஏ.வி.சுரேஷ்குமாா், செயலாளராக தனராஜன், பொருளாளராக ஸ்ரீராமன் உள்ளிட்ட நிா்வாகக்குழுவினா் பதவியேற்றுக் கொண்டனா். விழாவில் 5 மாணவியருக்கு கல்வி நிதியாக மொத்தம் ரூ.45,000, 25 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, சுகாதாரப் பணியாளா்கள் 10 பேருக்கு சேலைகள் வழங்கப்பட்டன.
விழாவில் முன்னாள் அரிமா சங்க ஆளுநா்கள் கே.அருண்குமாா்,அன்பு ஆகியோா் உட்பட சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.