காஞ்சிபுரம்

இளைஞா் வெட்டிக் கொலை

31st Jan 2023 01:48 AM

ADVERTISEMENT

படப்பை அருகே ஆரம்பாக்கம் அரசு மதுபானக்கடை அருகே இளைஞா் ஒருவா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

படப்பை ஊராட்சிக்குட்பட்ட ஆத்தனஞ்சேரி பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (38). வா்ணப் பூச்சு பணி செய்து வந்தாா். அவ்வப்போது பிளம்பிங் வேலைகளையும் செய்து வந்துள்ளாா். இந்த நிலையில், சரவணன் மது அருந்துவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை படப்பையை அடுத்த ஆரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுக்கடைக்கு சென்ாகத் தெரிகிறது. பின்னா், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவரது உறவினா்கள் இரவு முழுவதும் பல இடங்களில் தேடியுள்ளனா்.

இந்த நிலையில், ஆரம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் ஒருவா் இறந்து கிடப்பதாக திங்கள்கிழமை காலை மணிமங்கலம் போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த மணிமங்கலம் போலீஸாா், சடலத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டது சரவணன் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT