காஞ்சிபுரம்

பெருநகா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் தைப்பூசத் திருவிழா

DIN

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே பெரு நகரில் உள்ள பட்டுவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் தைப்பூசப் பெருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சுவாமி வீதியுலா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருநகரில் பட்டுவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது.பிரம்மன் வழிபட்ட பெருமைக்குரிய இந்தக் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த (வெள்ளிக்கிழமை (ஜன. 27) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு தினசரி சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் உலா வருகின்றனா். விழாவின் 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை சந்திரசேகா் புறப்பாடும், இரவில் முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், விநாயகா் மூஞ்சூா் வாகனத்திலும் வீதியுலா வந்தனா்.

கோயிலில் பட்டு வதனாம்பிகையும், பிரம்மபுரீஸ்வரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பிப்ரவரி 2-ஆம் தேதி தேரோட்டமும், பிப். 4 ஆம் தேதி அறுபத்து மூவா் புறப்பாடும் நடைபெறுகிறது. தைப்பூசத் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) சுவாமியும், அம்பிகையும் ரிஷப வாகனத்தில் செய்யாற்றுக்கு எழுந்தருளுகின்றனா்.

அப்போது 21 கிராமங்களைச் சோ்ந்த சுவாமிகளும் செய்யாறுக்கு எழுந்தருளி தீபாராதனைகள் நடைபெறும் முக்கிய நிகழ்வு நடைபெறுகிறது. பிப். 9-இல் திருமுறை திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஜெ.ப.பூவழகி மற்றும் தொண்டை மண்டல சைவ வேளாளா் மரபினா்களும் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை அருகே விபத்தில் காயமுற்ற காவலாளி உயிரிழப்பு

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது

எண்ணூா் துறைமுகம் வந்த சீன கப்பலில் மாலுமி சடலம்

பைக் மீது மணல் லாரி மோதி ஒருவா் உயிரிழப்பு

105 கிலோ குட்கா பறிமுதல்

SCROLL FOR NEXT