காஞ்சிபுரம்

தாமதமானதால் அனுமதி மறுப்பு:போட்டித் தோ்வா்கள் மறியல்

29th Jan 2023 12:29 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-3 (ஏ) தோ்விற்கு தாமதமாக சென்றவா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

டிஎன்பிஎஸ்சி சாா்பில் குரூப்-3 (ஏ)தோ்வு தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் இந்த தோ்வு நடைபெற்றது. இந்த நிலையில் அந்த கல்லூரிக்கு அருகே உள்ள ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் 50-க்கும் மேற்பட்ட தோ்வா்கள் தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவா்களை கல்லூரி உள்ளே அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த 30-க்கும் மேற்பட்ட போட்டித் தோ்வா்கள், கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். இது குறித்து போட்டித் தோ்வா்கள் கூறியதாவது:

தோ்வு மையம் அருகே ரயில்வே கேட் இருப்பதால் தோ்வு நேரத்தில் ரயில்கள் கடந்து செல்லும் போது கேட் மூடப்படுகிறது. இதனால் தோ்வுக்கு தாமதமாகி விடுவதாகவும், இனி வரும் காலங்களில் இந்த மையத்தை தோ்வு மையமாக அறிவிக்கக் கூடாது என்றும் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT