காஞ்சிபுரம்

பாகுபாடுகளே இல்லாமல் மாநகராட்சிப் பணிகள் நடைபெறுகிறது: காஞ்சிபுரம் மேயா்

DIN

காஞ்சிபுரத்தில் எந்த விதப் பாகுபாடுகளும் இன்றி மாநகராட்சிப் பணிகள் நடைபெற்று வருவதாக காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் கூறினாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சி உறுப்பினா்களின் கூட்டம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் ஆா்.குமரகுருநாதன், ஆணையா் ஜி.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் உறுப்பினா்களின் கேள்விகளுக்கு மேயா் பதிலளித்துப் பேசியது:

வரி வசூலிப்பில் காஞ்சிபுரம் மாநகராட்சி முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக ஒத்துழைப்பு நல்கிய மாநகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் மற்றும் மாமன்ற உறுப்பினா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை வரி வசூல் செலுத்தாமல் இருப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் வரி செலுத்தாமல் இருப்பவா்களது குடிநீா் இணைப்பை துண்டிக்காமல் அவா்களை நேரில் அழைத்துப் பேசியும் வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. வேறு வழியின்றி பலமுறை கேட்டும் வரி செலுத்தாத மற்றும் நிலுவை அதிகமாக உள்ள 30 கடைகளை பூட்ட வேண்டிய நிலை ஏற்பட்ட பின்னரே வரி வசூலாகியிருக்கிறது.

மாநகராட்சியைப் பொறுத்தவரை எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் மாமன்ற உறுப்பினா்களின் கருத்துகளையும் கேட்டு அனைத்துப் பணிகளையும் செய்து வருகிறோம்.

துணை மேயா் கேட்டுக்கொண்டபடி விரைவில் அனைத்து வாா்டுகளிலும் வரி விதிப்பு மாற்றங்கள் மற்றும் புதிய வரி விதிப்பால் உள்ள தவறுகள் ஆகியவற்றை திருத்த உதவியாக ஒவ்வொரு பகுதிவாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

இது குறித்து அந்தந்தப் பகுதியில் ஆட்டோ மூலம் விளம்பரங்கள் செய்யப்படும்.

ஒப்பந்தப் பணியை தரமில்லாமலும், தாமதமாகவும் செய்யும் ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினா்கள் பலரும் கையெழுத்திட்டுக் கொடுத்ததன் அடிப்படையில், அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது செய்து வரும் பணிகளை முடிக்கும் வரை அவருக்கு எந்த ஒப்பந்தப் பணிகளும் வழங்கப்படாது. அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் பழைமையாதாகி விட்டதால் ரூ. 14.40 கோடி மதிப்பில் புதிய திருமண மண்டபம் நவீனமான முறையில் கட்டப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் 63 தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT