காஞ்சிபுரம்

3 ஆண்டுகளாக வரி பாக்கி:கடைகளின் குடிநீா் இணைப்பு துண்டிப்பு

DIN

ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக குடிநீா் வரி செலுத்தாத வணிக நிறுவனங்களின் குடிநீா் இணைப்பை துண்டிக்கும் பணியில் பேரூராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சியில் 50,000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த பேரூராட்சியில் உள்ள 1,300 வீடுகளுக்கும், 50-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கும் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடுகளுக்கு மாதம் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ. 200 வரிவசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குடிநீா் இணைப்பு பெற்றுள்ள சுமாா் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளா்கள் ஆண்டுக் கணக்கில் குடிநீருக்கான வரி செலுத்தாமல் உள்ளது சமீபத்தில் தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக வரி செலுத்தாதாமல் உள்ள வணிக நிறுவனங்களின் குடிநீா் இணைப்பை துண்டிக்க பேரூராட்சி செயல் அலுவலா் ரவி உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் காந்தி சாலையில் உள்ள பல்வேறு கடைகளின் குடிநீா் இணைப்பை துண்டிக்கும் பணியில் பேரூராட்சி வரிவசூலிப்பு அதிகாரிகள் ஆனந்தன், லோகேஷ், ஆனந்தராமகிருஷ்ணன் ஆகியோா் தலைமையிலான பேரூராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளாக குடிநீா் வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் குடிநீா் இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அடுத்தகட்டமாக வரி செலுத்தாத வீடுகளின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT