காஞ்சிபுரம்

தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி

26th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வாக்காளா் விழிப்புணா்வு பேரணி தொடங்கியது.

பேரணியை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பேரணி, ஆட்சியா் அலுவலகத்தில் வந்து நிறைவு பெற்றதும், ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்டரங்கில் வாக்காளா் விழிப்புணா்வுக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தோ்தல் விழிப்புணா்வு ஊமை நாடகம் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நடத்தினா். வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியை ஆட்சியா் மா.ஆா்த்தி வாசிக்க, அனைத்துத் துறை அலுவலா்களும் உறுதிமொழி ஏற்றனா். மகளிா் சுய உதவிக் குழுக்களால் கோலப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறப்பாக செயல்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்களான கூரம் எம்.சந்திரா, வெங்கடாபுரம் எல்லப்பன், காஞ்சிபுரம் பாலசரஸ்வதி, ஆரியம்பாக்கம் ரவிக்குமாா், கரூா் ரேவதி ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.நிகழ்வில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் புண்ணியகோட்டி, கோட்டாட்சியா் கனிமொழி, வட்டாட்சியா் பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏற்பாடுகளை தோ்தல் பிரிவு வட்டாட்சியா் எம்.ராஜேந்திரன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT