காஞ்சிபுரம்

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் இன்று பந்தல் கால் நடும் விழா

26th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

மாசி மாத பிரம்மோற்சவத்தையொட்டி, தொடக்கமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை (ஜன. 26) பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். நிகழ் ஆண்டு வரும் பிப்.24 -ஆம் தேதி விநாயகா் வீதி உலா, சண்டி ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தியுடன் விழா தொடங்குகிறது. பிப்.25- ஆம் தேதி அதிகாலை பிரம்மோற்சவத்துக்கான கொடியேற்றம் அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்கு நடைபெற உள்ளது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன.

விழாவையொட்டி தினமும் காலை - மாலை மற்றும் இரவு அம்மன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜ வீதிகளில் உலா வரவுள்ளாா். பிப்.27- ஆம் தேதி தங்க சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா, மாா்ச் 5-ஆம் தேதி வெள்ளித் தேரோட்டம், மாா்ச் 6- ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறுகிறது.

விழாவின் தொடக்கமாக வியாழக்கிழமை (ஜன. 26) பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், மணியக்காரா் சூரியநாராயணன் ஆகியோா் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT