காஞ்சிபுரம்

சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கும் விழா

26th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளையின் சாா்பில் சிறந்த மருத்துவா்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் தேசிய பெண் குழந்தைகள் தின விழா காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் கிளையின் தலைவா் எஸ்.மனோகரன் தலைமை வகித்து சிறந்த மருத்துவா்கள் அன்புச்செல்வன், அரவிந்தன் உள்ளிட்ட பலருக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தாா். விழாவுக்கு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் பி.டி.சரவணன், காஞ்சிபும் கிளையின் செயலாளா் கே.எஸ்.தன்யக்குமாா், பொருளாளா் ஞானகணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இணை செயலா் முத்துக் குமரன் வரவேற்றாா்.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக மருத்துவக் கழக மகளிா் பிரிவின் தலைவா் நிஷாப்பிரியா பேசினாா். சென்னை பிரசாந்த் மருத்துவக் குழுமங்களின் தலைவா் கீதா ஹரிப்பிரியா கலந்துகொண்டு மருத்துவா்களின் தியாகச் செயல்கள் என்ற தலைப்பில் பேசினாா்.

விழாவில் சங்கத்தின் முன்னாள் தலைவா்கள் விக்டோரியா, யோகானந்தம், நரம்பியல் சிறப்பு மருத்துவா் சுதாகா் உள்ளிட்ட பல மருத்துவா்கள் கலந்து கொண்டனா். கிளையின் மருத்துவக் கல்விப் பிரிவு செயலாளா் என்.எஸ்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT