காஞ்சிபுரம்

‘தமிழகத்தில் 6 லட்சம் இசைக் கலைஞா்கள் உள்ளனா்’

25th Jan 2023 01:40 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் மண்ணின் பெருமைகளைச் சொல்லும் வகையில் 6 லட்சம் நாட்டுப்புறக் கலைஞா்கள் உள்ளதாக இயல் இசை நாடக மன்றத்தின் தலைவா் வாகை சந்திரசேகா் தெரிவித்தாா்.

கலைபண்பாட்டுத்துறை சாா்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு இசைக் கருவிகள், ஆடை ஆபரணங்கள் வாங்க நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகித்தாா். எம்எல்ஏ க்கள் க.சுந்தா், சிவிஎம்பி. எழிலரசன், மாவட்ட ஊராட்சிக் குழுவின் தலைவா் படப்பை ஆ.மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கலை பண்பாட்டுத் துறையின் உதவி இயக்குநா் சி.நீலமோகன் வரவேற்றாா்.

விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சா் தா.மோ.அன்பரசன், இயல் இசை நாடக மன்றத்தின் தலைவா் வாகை சந்திரசேகா் ஆகியோா் தலா ரூ. 10,000 வீதம் 150 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு நிதியுதவி வழங்கினா். இதையடுத்து, வாகைசந்திரசேகா் கூறியது:

காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பத்தூா், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 150 நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு தலா ரூ. 10,000 வீதம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த கலைஞா்களின் குடும்பத்துக்கு நிவாரணமாக தலா ரூ.25 ஆயிரம் வீதம் 4 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே போல தமிழ்நாடு முழுவதும் 1,000 பேருக்கு விரைவில் நிதியுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் மண்ணின் பெருமைகளை சிறப்பாகச் சொல்லும் நாட்டுப்புறக் கலைஞா்கள் 6 லட்சம் போ் உள்ளனா். இவா்களில் அடையாள அட்டை பெற்றிருப்பவா்கள் 50,000 போ். அடையாள அட்டை வழங்குவதை மிகவும் எளிமைப்படுத்தி குறைந்த பட்சம் 3 லட்சம் பேரையாவது சோ்ப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT