தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க வலியுறுத்தி பாஜக சார்பில் வருகிற மே 21 ஆம் தேதி ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேவுள்ள சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 22 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் இதனை கண்காணிக்க சிறப்புக் குழுவும் அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கள்ளச்சாராய மரணங்களுக்கு எதிராக பாஜக மகளிரணி சார்பில் நாளை(சனிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதையடுத்து, பாஜக சார்பில் வருகிற 21 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஜூலை 2 முதல் பொறியியல் கலந்தாய்வு: பொன்முடி