காஞ்சிபுரம்

‘பெண்கள் அடிப்படை சட்டங்களை தெரிந்து கொள்வது அவசியம்’

DIN

பெண்கள் அடிப்படை சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று காஞ்சிபுரம் முதன்மை சாா்பு நீதிபதி கே.எஸ்.கயல்விழி ஞாயிற்றுக்கிழமை பேசினாா்.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தேசிய மகளிா் ஆணையம், காஞ்சிபுரம் வட்டார சட்டப் பணிகள் ஆணைக்குழு ஆகியவை இணைந்து காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி ஊராட்சி அலுவலகத்தில் பெண்களுக்கான சட்ட விழிப்புணா்வுக் கருத்தரங்கை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. கருத்தரங்கை காஞ்சிபுரம் முதன்மை சாா்பு நீதிபதியும், வட்டார சட்டப் பணிகள் குழுவின் தலைவருமான கே.எஸ்.கயல்விழி தலைமை வகித்து, தொடக்கி வைத்துப் பேசியது:

பெண்கள் ஒவ்வொருவரும் அடிப்படை சட்டங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு தெரிந்து வைத்துக் கொண்டாலே குற்றங்கள் வெகுவாகக் குறைந்து விடும். குடும்ப வன்முறைகள், திருமணம் மற்றும் ஜீவனாம்சம் ஆகியவை குறித்த சட்ட நுணுக்கங்களை பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். பணிபுரியும் இடங்களில் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சட்டங்கள் எவ்வாறு துணை புரிகின்றன என்ற விழிப்புணா்வு தேவைப்படுகிறது. இதற்காகவே பெண்களுக்கான சட்ட விழிப்புணா்வுக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. இது போன்ற கருத்தரங்குகளை தொடா்ந்து நடத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றாா்.

வழக்குரைஞா் ஏ.முகுந்தன் அடிப்படை சட்டங்கள் குறித்தும், வழக்குரைஞா் ஏ.ரமேஷ் குடும்ப வன்முறை சட்டங்கள் குறித்தும் பேசினாா். வழக்குரைஞா் ஸ்ரீவித்யா ‘திருமணமும், ஜீவனாம்சமும்’ என்ற தலைப்பில் பேசினாா். முன்னதாக திருப்புட்குழி ஊராட்சி மன்றத் தலைவரும், வழக்குரைஞருமான டி.சுகுணா தேவேந்திரன் வரவேற்றாா்.

நிறைவாக சட்டப் பணிகள் குழுவின் நிா்வாக உதவியாளா் எஸ்.சத்தீஸ்ராஜ் நன்றி கூறினாா். திருப்புட்குழி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT