பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக கன்னியாகுமரி - புணே விரைவு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கேரள மாநிலம் அங்கமாலி - ஆலுவா ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கன்னியாகுமரி - புணே விரைவு
ரயில் (எண்: 16382) மே 21ஆம் தேதி வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், திருச்சூரில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், ஈரோடு வழித்தடத்தில் இயக்கப்படும்.
இதனால், கோவை, திருப்பூா் நிலையங்களுக்கு இந்த ரயில் செல்லாது.
திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.