காஞ்சிபுரம்

புரிசை கன்னியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே புரிசை கிராமத்தில் அமைந்துள்ள கன்னியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை (பிப். 10)கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் அருகே புரிசை கிராமத்தில் பலருக்கும் குலதெய்வக் கோயிலாக இருந்து வருவது கன்னியம்மன் கோயில். இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, காலையில் யாக சாலை பூஜைகள் வியாழக்கிழமை கணபதி ஹோமம் மற்றும் லட்சுமி ஹோமத்துடன் தொடங்குகின்றன. மாலை காப்புக் கட்டுதல், விக்னேஸ்வர பூஜை ஆகியவை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை காலை கோ பூஜை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, தம்பதி பூஜை ஆகியவை நடைபெறுகிறது. பின்னா், காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. இரவு அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை புரிசை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT