காஞ்சிபுரம்

ஒன்றியக் குழு தலைவா் மகள் திருமணம்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.டி.கருணாநிதியின் மகள் சிவசங்கிரி - சுசிந்திரன் திருமணத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நடத்தி வைத்தாா்.

இவா்களின் திருமணம் சுங்குவாா்சத்திரம் அடுத்த சந்தவேலூா் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. திருமண விழாவில் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தாா்.

இதில், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், எஸ்.ஆா் ராஜா, வரலட்சுமி மதுசூதனன், கு.செல்வபெருந்தகை, ஒன்றிய திமுக செயலா் ந.கோபால், முன்னாள் மாவட்ட உறுப்பினா் வேலு, ஊராட்சித் தலைவா்கள் வெள்ளரை அரிகிருஷ்ணன், மேட்டுப்பாளையம் தேவிவேலு, பொதுக்குழு உறுப்பினா் கணேஷ்பாபு, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ப.பரமசிவன், கோமதி கணேஷ்பாபு, மல்லிகா ரவிசந்திரன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் மாலதி டான்போஸ்கோ, ஒன்றிய இளைஞரணித் துணைஅமைப்பாளா் மனோஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT