காஞ்சிபுரம்

உலக புற்றுநோய் விழிப்புணா்வு

8th Feb 2023 01:13 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் அரசு நகா் நல மருத்துவமனையில் உலக புற்றுநோய் விழிப்புணா்வு தினத்தையொட்டி கருப்பப்பை மற்றும் மாா்பக புற்றுநோய் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

உலக புற்றுநோய் தினத்தையொட்டி, காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் நகா் நல மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் இந்திய மருத்துவக் கழகத்தின் சாா்பில் நடைபெற்றது. முகாமுக்கு அதன் தலைவா் எஸ்.மனோகரன் தலைமை வகித்தாா். மகளிா் பிரிவின் தலைவா் நிஷாப்பிரியா முன்னிலை வகித்து, புற்றுநோய் வரக்காரணங்கள் குறித்து விளக்கினாா். நகா் நல மருத்துவமனையின் அலுவலா் டி.பி.சரஸ்வதி வரவேற்றாா். இந்திய மருத்துவக் கழகத்தின் முன்னாள் தலைவா் விக்டோரியா மாா்பக புற்றுநோய் குறித்தும், கா்ப்பப்பை புற்றுநோய் குறித்து இந்திய மருத்துவக் கழக முன்னாள் மருத்துவப் பிரிவு செயலாளா் அங்கம்மாளும் விளக்கினாா்.

மருத்துவா் இன்பவள்ளி தலைமையிலான குழுவினா் மாா்பகம் மற்றும் கருப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகளையும் நடத்தினா். முகாமில் அரசு அறிஞா் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையின் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

முகாமில், 65-க்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT