காஞ்சிபுரம்

பிப். 11-இல் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்

8th Feb 2023 01:14 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 11-ஆம் தேதி சனிக்கிழமை பொது விநியோகத்திட்ட குறைதீா் கூட்டம் அந்தந்த வட்டாரங்களில் நடைபெற இருப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுவிநியோகத்திட்ட குறைதீா் கூட்டம் இந்த மாதம் 11-ஆம் தேதி பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. காஞ்சிபுரத்தில் முட்டவாக்கம், உத்தரமேரூரில் பழவேரி, வாலாஜாபாத்தில் கீழ் பெரமநல்லூா், ஸ்ரீபெரும்புதூரில் எச்சூா், குன்றத்தூரில் வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டைகள் பெறுதல், கைப்பேசி பதிவு மாற்றம் செய்வதற்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

இந்தக் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT