காஞ்சிபுரம்

சொன்னவண்ணம் செய்த பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சின்னகாஞ்சிபுரம் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாளுக்கு’ பாலாற்றங்கரையில் சிறப்பு திருமஞ்சனத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

சின்னகாஞ்சிபுரம் பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ ஆண்டு தோறும் தை மாதம் மக நட்சத்திரத்தின் போது பாலாற்றில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படி, ஸ்ரீதேவி, பூதேவியருடன் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் உற்சவா் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்டு, சேஷ வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காஞ்சிபுரம் பாலாற்றங்கரையில் எழுந்தருளினாா். அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சிறப்புத் திருமஞ்சனம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

இதையடுத்து, பெருமாள் மீண்டும் அலங்கரிக்கப்பட்ட சேஷ வாகனத்தில் ஓரிக்கையில் உள்ள மகா பெரியவா் மணி மண்டபம், வேளிங்கப்பட்டரை, தேசிகா் சந்நிதி வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தாா். அங்கு திருமழிசை ஆழ்வாா் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் நல்லப்பா நாராயணன் செய்திருந்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT