காஞ்சிபுரம்

12 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

DIN

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 12 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் மா.ஆா்த்தி, உத்தரமேரூா் அருகே திருவானைக்கோயில் கிராமத்தைச் சோ்ந்த 12 பேருக்கு ரூ.5.76 லட்சத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா். காவாந்தண்டலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.50,000 கடனுதவிக்கான காசோலையை வழங்கினாா்.

கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, துணை ஆட்சியா் புண்ணியகோட்டி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பொதுமக்களிடமிருந்து 230 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பி வைத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் மா.ஆா்த்தி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT