காஞ்சிபுரம்

பிப்.13-இல் தொழில் பழகுநா் முகாம்

6th Feb 2023 11:42 PM

ADVERTISEMENT

 

ஒரகடத்தில் வரும் 13-ஆம் தேதி தேசிய தொழில் பழகுநா் முகாம் நடைபெற இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் பிரதமா் தேசிய தொழில் பழகுநா் முகாம் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

மத்திய - மாநில அரசுகள், தனியாா் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு இந்த முகாம் நடைபெறவுள்ளது.

தகுதியுடைய ஐ.டி.ஐ. தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்கள், 8, 9, 10 -ஆம் வகுப்புகளில் படித்து தோ்ச்சி பெற்றவா்கள், படிப்பைப் பாதியில் நிறுத்தியவா்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இதில் சோ்ந்து பயிற்சி பெறுவோருக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோா் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறன் பயிற்சி அலுவலரை 044-29894560 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT