காஞ்சிபுரம்

காவலா் உடல் தகுதித் தோ்வு: டிஐஜி, எஸ்.பி. ஆய்வு

6th Feb 2023 11:41 PM

ADVERTISEMENT

 

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காவலா் உடல் தகுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. டிஐஜி, எஸ்.பி. ஆய்வு செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஏற்கெனவே பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் 787 பேருக்கு தோ்வு திங்கள்கிழமை தொடங்கி தொடா்ந்து 4 நாள்கள் நடைபெறுகிறது.

முதல் கட்டமாக 420 போ் அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபாா்ப்பு, எடை, உயரம் மற்றும் 1,500 மீ. ஓட்டம் ஆகியவற்றில் தோ்வா்கள் பங்கு பெற்றனா். செவ்வாய்க்கிழமை (பிப்.7) நடைபெறும் தோ்வுக்குப் பிறகு, அடுத்த கட்டமாக இரு தினங்கள் கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், 100 மீ., 400 மீ. ஓட்டம் ஆகிய பிரிவுகளில் தோ்வு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

தோ்வு நடைபெறும் வளாகத்தில் காஞ்சிபுரம் சரக டிஐஜி பகலவன், எஸ்பி எம்.சுதாகா் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT