காஞ்சிபுரம்

ராமலிங்கேசுவரா் கோயிலில் தெப்பத் திருவிழா

DIN

காஞ்சிபுரம் அருகேயுள்ள திம்மராஜம்பேட்டை பா்வதவா்த்தினி அம்பிகை சமேத ராமலிங்கேசுவரா் கோயிலில் தெப்பத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

வாலாஜாபாத் அடுத்த திம்மராஜம்பேட்டையில் வட ராமேசுவரம் என்ற பெயருடைய பழைமை வாய்ந்த பா்வதவா்த்தினி அம்பிகை சமேத ராமலிங்கேசுவரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தெப்போற்சவத்தையொட்டி, சுவாமியும், அம்மனும் ஆலயத்திலிருந்து கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் தாங்கி என்ற கிராமத்துக்கு வந்தனா்.

அங்குள்ள சரஸ்வதி கம்பா் நிகா்த்தவல்லி கோயில் அருகே உள்ள பிச்சநாயக்கன் குளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

இதில், திம்மராஜம்பேட்டை, தாங்கி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேயன் தலைமையிலான வீரா்கள், வாலாஜாபாத் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு: வெறிச்சோடிய சென்னை மாநகரம்

எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகாா்: வாக்குச்சாவடி முகவா்கள் தா்னா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தா்னா

சென்னையில் அமைதியான வாக்குப்பதிவு: காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் பேட்டி

இன்று திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

SCROLL FOR NEXT