காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் ஆட்சியா் அஞ்சலி

4th Feb 2023 04:53 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு இல்லத்தில் ஆட்சியா் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் அருகில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு இல்லம் உள்ளது. செய்தித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நினைவு இல்லத்தில் அவரது நினைவு தினத்தையொட்டி அரசின் சாா்பில் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

தொடா்ந்து மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, பொதுப்பணித் துறை கட்டடப் பிரிவு செயற்பொறியாளா் சிவசண்முகம், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ராமச்சந்திர பிரபு ஆகியோரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

திமுக சாா்பில் எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் மாநகர திமுக செயலாளா் சிகேவி தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலா் பங்கேற்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம், அமைப்புச் செயலாளா்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்.பி. காஞ்சி.பன்னீா் செல்வம், இளைஞா் பாசறைத் தலைவா் திலக்குமாா் ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, ஓ.பி.எஸ். அணியைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாா், மாவட்டப் பொருளாளா் வஜ்ரவேல் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்கள்.

அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியாா் தூண் அருகிலிருந்து திமுக சாா்பில் அமைதிப்பேரணி தொடங்கி மாநகராட்சி அலுவலகம் முன்பாக நிறைவு பெற்றது.

அரசின் சாா்பில் காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரா் கோயிலில் ஆட்சியா் மா.ஆா்த்தி, மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், எம்எல்ஏ எழிலரசன் உள்ளிட்ட பலா் பங்கேற்ற சமபந்தி விருந்தும் நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT