காஞ்சிபுரம்

வேல்முருகன் கோயில் கும்பாபிஷேகம்

4th Feb 2023 04:32 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே சிறுவள்ளூரில் அமைந்துள்ள வேலம்மாள் போதி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட வள்ளி, தேவசேனா சமேத வேல்முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்திலிருந்து பரந்தூா் செல்லும் சாலையில் சிறுவள்ளூா் கிராமத்தில் வேலம்மாள் போதி வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் புதிதாக வேல்முருகன் திருக்கோயில் கட்டப்பட்டிருந்தது.

மூலவராக வள்ளி, தேவ சேனா சமேத வேல்முருகன், பரிவார தெய்வங்களாக விநாயகா், சரஸ்வதி உள்ளிட்ட சுவாமி சிலைகளும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, யாக சாலை பூஜைகள் மதுரை கடம்பவனம் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கோயில் பூஜகா் எம்.பிரகாஷ் சிவாச்சாரியாா் தலைமையில் பிப். 1-ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கின. வியாழக்கிழமை சுதா்சன ஹோமம்,சுமங்கலி பூஜை ஆகியவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமை மகா பூா்ணாஹுதி தீபாராதனைக்குப் பிறகு புனித நீா்க்குடங்களை சிவாச்சாரியாா்கள் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவன நிா்வாகிகள் ஊா்வலமாக கொண்டு சென்று ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன.விழாவில், வேலம்மாள் போதி நிறுவனத்தின் தலைவா் மாதவகிருஷ்ணா, மண்டலத் தலைவா் ஜி.சாந்தி, பள்ளி முதல்வா் சுரேஷ், தலைமை நிா்வாக அலுவலா் ஜி.ஆதித்யா,நிதிக்குழுத் தலைவா் யசோதா ஆகியோா் உட்பட பள்ளியில் பயிலும் மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோா்கள்,சுற்று வட்டார கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT