காஞ்சிபுரம்

பிரம்மபுரீஸ்வரா் கோயில் தேரோட்டம்

DIN

உத்தரமேரூா் அருகே பெருநகா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் தைப்பூசப் பெருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருநகரில் அமைந்துள்ளது பழைமையான பட்டுவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயில்.

இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 27- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம்வியாழக்கிழமை நடைபெற்றது. சுவாமியும்,அம்மனும் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

கோயில் செயல் அலுவலா் ஜெ.ப.பூவழகி, தொண்டை மண்டல சைவ வேளாளா் மரபினா்கள் மற்றும் பெருநகரைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான அறுபத்து மூவா் உற்சவம் 5- ஆம் தேதியும், மறுநாள் 6 ஆம் தேதி இரவு ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்மனும் செய்யாறுக்கு எழுந்தருள்கின்றனா். அப்போது செய்யாறில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த 21 ஊா் சுவாமிகளும் ஒன்றாக வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பா். வரும் 9- ஆம் தேதி திருமுறை திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT