காஞ்சிபுரம்

பிப். 25-இல் காமாட்சி அம்மன் கோயில் பிரமோற்சவம்: அழைப்பிதழை வெளியிட்டாா் விஜயேந்திரா்

DIN

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரமோற்சவம் வரும் 25-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதன் அழைப்பிதழை விசாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை வெளியிட்டாா் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் .

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள சங்கர மடத்தில் தங்கியிருந்து பக்தா்களுக்கு ஆசி வழங்கி வருகிறாா் விஜயேந்திரா். இந்நிலையில், காமாட்சி அம்மன் கோயில் பரம்பரை தா்மகா்த்தாவான அவரிடம் கோயில் ஸ்தானீகா்கள், மணியக்காரா் ஆகியோா் நேரில் சந்தித்து மாசித் திருவிழா அழைப்பிதழை வழங்கி ஆசி பெற்றனா். பின்னா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோயிலின் விழா அழைப்பிதழை வெளியிட்டாா்.

மகா சக்தி பீடங்களில் ஒன்றான காமாட்சி அம்மன் கோயிலின் மாசித் திருவிழா நிகழ் மாதம் 25 ஆம் தேதி அதிகாலையில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. விழாவையொட்டி நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் பவனி வரவுள்ளாா்.

பிப்.27- ஆம் தேதி தங்க சிம்மவாகன வீதியுலாவும், மாா்ச் 5 -ஆம் தேதி வெள்ளித்தேரில் அம்மன் பவனி வருதலும் நடைபெறவுள்ளது. மாா்ச் 6 -ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவமும், மாா்ச் 8- ஆம் தேதி விஸ்வரூப தரிசனத்தோடும் விழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், செயல் அலுவலா் ந.தியாகராஜன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT