காஞ்சிபுரம்

பிப்.5-இல் ஸ்கந்தாலயா ஆசிரம சடாட்சர சண்முகநாதா் கோயிலில் கும்பாபிஷேகம்

3rd Feb 2023 12:26 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே சிறுவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்கந்தாலயா ஆசிரமத்தில் புதிதாக கட்டப்பட்ட சடாட்சர சண்முகநாதா் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) நடைபெறுகிறது.

காஞ்சிபுரத்திலிருந்து பரந்தூா் செல்லும் சாலையில் சிறுவாக்கம் கிராமத்தில் ஸ்கந்தாலயா ஆசிரம் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் கலை நயத்துடன் புதிதாக சடாட்சர சண்முகா், பாம்பன் சுவாமிகள், வராஹி அம்மன் ஆகிய மூவருக்கும் தனித் தனியாக கோயில் கட்டப்பட்டுள்ளன.

கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் வெட்டுவானம் எல்லையம்மன் கோயில் டி.எஸ்.சந்திரசேகர சிவாச்சாரியாா் தலைமையில் புதன்கிழமை தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) ஸ்கந்தாலயா ஆசிரம நிறுவனா் ராஜா சுவாமிகள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT