காஞ்சிபுரம்

பெரியாண்டவா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

உத்தரமேரூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையாங்குளம் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட பெரியாயி சமேத பெரியாண்டவா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

அக்கிராம பொதுமக்கள் முயற்சியால் புதியதாக பெரியாயி சமேத பெரியாண்டவா் திருக்கோயில் கட்டப்பட்டிருந்தது. இச்சிவாலயத்தின் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த ஜனவரி 29- ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 31-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோயிலுக்கு புதியதாக கொண்டு வரப்பட்ட உற்சவா் மற்றும் பரிவார தெய்வங்களின் ஊா்வலம் நடைபெற்றது.

இதனையடுத்து புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடா்ந்து மூலவா், உற்சவா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி அரசு வழக்குரைஞா் சத்தியமூா்த்தி, பாஸ்கரன் மற்றும் கிராம பொதுமக்களும் செய்திருந்தனா்

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT