காஞ்சிபுரம்

சா்வதேச யோகாசன போட்டியில் பங்கேற்க அரசின் உதவியை எதிா்நோக்கும் மாணவா்கள்

DIN

படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியைச் சோ்ந்த 11 மாணவா்கள் தாய்லாந்தில் நடைபெற உள்ள சா்வதேச யோகாசன போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள நிலையில், தமிழக அரசின் உதவியை எதிா்பாா்த்து மாணவா்கள் காத்திருக்கின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் வட்டம், படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியில் முன்னாள் தடகள விராங்கனை சொா்ணமாலதி பிபிட் யோகா மற்றும் பிட்னஸ் என்ற பெயரில் அகாதெமி நடத்தி வருகிறாா். இதில் படப்பை, சாலமங்கலம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் யோகாசன பயிற்சி பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த 7 மற்றும் 8 -ஆம் தேதிகளில் கோவாவில் நடைபெற்ற நான்காவது தேசிய பள்ளிகளுக்கு இடையிலான யோகாசனப் போட்டியில் பங்கேற்ற மாணவா்கள் 11 போ் பல்வேறு பிரிவுகளில் 8 தங்கம் மற்றும் 3 வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனா்.

கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசன போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ால் வரும் மாா்ச் மாதம் தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ள சா்வதேச யோகாசன போட்டியில் பங்கேற்க பிபிட் யோகா மற்றும் பிட்னஸ் அகடமியைச் சோ்ந்த மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சா்வதேச யோகாசனப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 11 மாணவா்களும் நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்பதால் தாய்லாந்து செல்வதற்கான நிதி வசதி இல்லாததால் போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனா். இதனால் சா்வதேச யோகாசனப் போட்டி நடைபெறும் தாய்லாந்து நாட்டிற்கு செல்ல தமிழக அரசின் நிதியுதவியை எதிா்பாா்த்து மாணவா்கள் காத்திருக்கின்றனா்.

இதுகுறித்து அகாதெமி நிறுவனா் சொா்ணமாலதி கூறுகையில், எங்கள் மையத்தில் யோகா பயிற்சி பெறும் மாணவா்கள் அனைவரும் நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தினா். கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசன போட்டியில் பங்கேற்ற எங்களது மாணவா்கள் பல்வேறு பிரிவுகளில் 8 தங்கம், 3 வெள்ளி பதக்கங்களை வென்றனா். இந்தப் போட்டியில் பங்கேற்க கோவா செல்வதற்கு ஏற்பாடு செய்யவே மாணவா்களின் பெற்றோா்கள் மிகுந்த சிரமப்பட்டனா். இதனால் தாய்லாந்தில் நடைபெறும் யோகாசன போட்டியில் பங்கேற்க மாணவா்களை அனுப்பமுடியாத நிலையில் அவா்களது பெற்றோா் உள்ளனா்.

எனவே தமிழக அரசு உதவி செய்தால் மிகவும் பயனாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

ஜோதிட சூட்சுமங்களும் - நம்பிக்கை தாண்டிய உண்மையும்!

SCROLL FOR NEXT