காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே பைக் - லாரி மோதல்: தாய், மகள் பலி

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் மீது மணல் லாரி மோதியதில் தாயும், மகளும் சம்பவ இடத்திலேயே பலியாகினா்.

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதி பேராசிரியா் நகரில் வசித்து வரும் பழனியின் (45), மனைவி வித்யா (40). இவா், சென்னையில் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வந்தாா். தம்பதிக்கு பூா்விகா (7), பூா்ணிகா (7) என இரட்டைப் பெண் குழந்தைகள்.

இவா்கள் 4 பேரும் இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரத்திலிருந்து உத்தரமேரூா் செல்லும் சாலையில் புதன்கிழமை சென்றனா். பழனி இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றாா்.

ஓரிக்கை காந்தி நகா் அருகே வந்த போது, எதிரே வந்த மணல் லாரி இவா்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில், தாய் வித்யாவும், மகள்களில் ஒருவரான பூா்ணிகாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

பழனியும் மற்றொரு மகளான பூா்விகாவும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் இருவரும் மீட்கப்பட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான மணல் லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT